"தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையே காணோமாம்": போலீசில் புகார்
"தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையே காணோமாம்": போலீசில் புகார்
ADDED : ஜன 31, 2024 12:00 PM

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இவருக்கான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக அதனை டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப முடிவு செய்தார். அதற்காக அடையாள அட்டையை தனது உதவியாளர் சரவணன் என்பவர் மூலம் தபால் மூலம் அனுப்புவதற்காக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, உதவியாளர் அடையாள அட்டையை தபால் நிலையம் எடுத்து சென்ற போது அங்கே தவறிவிட்டதாக தெரிகிறது. இதனால் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியின் தேர்தல் அடையாள அட்டையே காணாமல் போனதால், போலீசார் விறுவிறுப்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.