sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவர் ஒரு பிரபலம் என்று தெரியாது: நடிகர் சயீப் அலிகான் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பேட்டி!

/

அவர் ஒரு பிரபலம் என்று தெரியாது: நடிகர் சயீப் அலிகான் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பேட்டி!

அவர் ஒரு பிரபலம் என்று தெரியாது: நடிகர் சயீப் அலிகான் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பேட்டி!

அவர் ஒரு பிரபலம் என்று தெரியாது: நடிகர் சயீப் அலிகான் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பேட்டி!

13


ADDED : ஜன 18, 2025 09:39 AM

Google News

ADDED : ஜன 18, 2025 09:39 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: நடிகர் சயீப் அலிகான் காயம் அடைந்ததும், விரைவாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங், 'எனக்கு அவர் பிரபலம் என்று தெரியாது. நான் வாடகை வாங்க வில்லை. அவருக்கு உதவியதில் நான் திருப்தி அடைந்தேன்' என தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அங்குள்ள, 12வது மாடியில், நான்கு தளங்களுடன் இவரது வீடு உள்ளது. மனைவியும், நடிகையுமான கரீனா கபூர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்குள் இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர், சயீப் அலிகானை ஆறு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

அறுவை சிகிச்சைக்கு பின், முதுகில் சிக்கியிருந்த கத்தியின் பாகம் வெளியே எடுக்கப்பட்டது. நடிகர் சயீப் அலிகானை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங், கூறியதாவது: நான் வழக்கமாக இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவேன். அன்று இரவு குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது, ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர், எனது ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினார். அவர்கள் அனைவரும் பெரும் பீதியுடன் இருந்ததை காண முடிந்தது.

அவர்களில் காயம் பட்டிருந்தவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டபடி, உள்ளே அமர்ந்து கொண்டார். மற்ற இருவரும் அருகில் அமர்ந்து கொண்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு போக வேண்டும் என்றனர். அப்போது எனது ஒரே எண்ணம் குறுக்கு வழியில் அழைத்து சென்று, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என நினைத்தேன். விரைவாக அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தேன். பயணத்தின் போது காயம் பட்டவர் சுயநினைவுடன் இருந்தார். தெளிவாக பேசினார்.

மருத்துவமனை செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று திரும்பத் திரும்பக் கேட்டார். இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவரது வெள்ளை ஆடை ரத்தத்தில் நனைந்திருப்பதை நான் கவனித்தேன். பிறகு தான் எனக்கு அவர் பிரபல பாலிவுட் நடிகர் என்பது தெரியவந்தது. நான் அவர்களிடம் வாடகை கூட கேட்கவில்லை.

இவ்வளவு பெரிய நடிகர் என் வாகனத்தில் வந்ததும், நான் அவர்களுக்கு உதவியதும், எனக்கு பெரிய திருப்தியாக இருந்தது. மருத்துவமனையை அடைந்ததும், ஊழியர்கள் உடனடியாக அவரைக் கவனித்து ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us