"நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது நாம் தமிழர் கட்சி": எல்.முருகன் குற்றச்சாட்டு
"நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது நாம் தமிழர் கட்சி": எல்.முருகன் குற்றச்சாட்டு
ADDED : பிப் 04, 2024 11:36 AM

கோவை: 'நாட்டுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஈடுபடுகிறது' என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எல்.முருகன் கூறியிருப்பதாவது: மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம். நாட்டுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஈடுபடுகிறது. தமிழக போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதன்படி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களை கைது செய்ய, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதாவது என்.ஐ.ஏ., என்பது நாட்டிற்கு எதிராக செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான். அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.
கூட்டணி
நாட்டை பாதுகாக்கும் முக்கியமான அமைப்பு தான் என்.ஐ.ஏ.,. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்கும் போது, அய்யோ என்ன மிரட்டுறாங்க, அய்யோ என்னை காப்பாற்றுங்கள் என்று அலறும் சத்தத்தை கேட்டு இருக்கிறோம்.
அதைத்தான் இப்போது தவறு செய்தவர்கள் செய்கிறார்கள். லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்த அறிவிப்பை தேசிய தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள். கோவையில் அண்ணாமலை போட்டியிட விரும்பினால் தேர்தல் வேலைகள் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.