ADDED : ஜூலை 21, 2011 01:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வல்லிநோக்கம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட 36 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டி வந்த கலீல் இப்ராஹிம் மற்றும் ஷேட் இப்ராஹிம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தந்தை, மகன் என்பது குறிப்பிடத்தக்கது.