ADDED : மார் 02, 2024 12:00 PM

சென்னை: பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் 4 லோக்சபா தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ., உடன் லோக்சபா தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்து உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடந்தது.
அதில், பா.ஜ.,விடம் 4 லோக்சபா தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என தமாகா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றில் 4 தொகுதிகளை ஒதுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

