அக்டோபர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு
அக்டோபர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு
ADDED : அக் 13, 2025 12:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (அக் 14) முதல் அக்டோபர் 17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (அக் 14) முதல் அக்டோபர் 17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.
மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேஷன், ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
அக்டோபர் 15ம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன் வைக்கப்படும். அதனை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக்டோபர் 17ம் தேதி விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பார். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.