sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

15 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை: ஐந்து மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்'

/

15 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை: ஐந்து மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்'

15 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை: ஐந்து மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்'

15 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை: ஐந்து மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்'

4


UPDATED : ஆக 11, 2024 06:54 AM

ADDED : ஆக 11, 2024 06:39 AM

Google News

UPDATED : ஆக 11, 2024 06:54 AM ADDED : ஆக 11, 2024 06:39 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் 30 - 40 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று


கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும்.

ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், கரூர், அரியலுார், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

நாளை


கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும்.

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, புதுக்கோட்டை, துாத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

13ம் தேதி


கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும்.

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலுார், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையும், கன மழை வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளன.

மிதமான மழை


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 15; கடலுார் மாவட்டம் தொழுதுாரில் 14; சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 12; சேலம் மாவட்டம் வீரகனுார், அரியலுார் மாவட்டம் செந்துறை; கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம் பகுதிகளில் தலா 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை; திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில், தலா 10 செ.மீ., மழை பதிவானது.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us