ADDED : பிப் 14, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கோவிந்தராஜன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, ரமேஷ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் அண்ணாதுரை எம்.எல்.ஏ., மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, பழனிவேல், புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட செயலர் முபராக் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எம்.ராஜு, புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்த, முன்னாள் அமைச்சர் மைதீன்கான் மாற்றப்பட்டு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.

