நீரில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் பலி: குளிக்க சென்ற இடத்தில் சோகம்!
நீரில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் பலி: குளிக்க சென்ற இடத்தில் சோகம்!
ADDED : மே 30, 2025 07:38 PM

ராமநாதபுரம்: இரு வேறு சம்பவங்களில், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நீரில் மூழ்கி 4 சிறுமிகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தில் ரோஷ்னி (9), பிரசன்யா (11) ஆகிய இரண்டு சிறுமிகள் ஊரணியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களை மீட்பு படையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்டனர். சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மதுரை அப்பன் திருப்பதி அருகே கண்மாயில் குளித்த பிரியா (11), அன்னலட்சுமி (12) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குளிக்க சென்ற இடத்தில் சிறுமிகள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.