லோக்சபா தேர்தல் பணிக்கு அ.தி.மு.க.வில் 4 குழுக்கள்
லோக்சபா தேர்தல் பணிக்கு அ.தி.மு.க.வில் 4 குழுக்கள்
ADDED : ஜன 23, 2024 05:01 AM

சென்னை : லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ள, அ.தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டு குழு உட்பட, நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீட்டு குழுவில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் இடம் பெற்றுள்ளனர்
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயகுமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்
பிரசார குழுவில், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், செல்லுார் ராஜு, அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி ஆகியோர் உள்ளனர்
தேர்தல் விளம்பர குழுவில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரஹீம், ராஜலட்சுமி, மருத்துவ அணி செயலர் வேணுகோபால், இளைஞர் பாசறை செயலர் பரமசிவம், வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் ராஜ் சத்யன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

