ADDED : ஜன 22, 2025 02:14 AM

காரைக்குடி:காரைக்குடி கல்லுாரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்தபடி நடந்து சென்றார். ஏராளமானோர் கை கொடுத்து, செல்பி எடுத்துக் கொண்டனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலையில் கட்டப்பட்ட வளர்தமிழ் நுாலகம் மற்றும் திருவள்ளுவர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மாலையில் முதல்வர் ஸ்டாலின் அழகப்பா பல்கலை வாயிலில் இருந்து கல்லுாரிச் சாலை, தேவர் சிலை வழியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் தனியார் மஹால் வரை 4 கி.மீ., துாரம் நடந்து சென்றார்.
வழி நெடுகிலும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரிடம் கை கொடுத்தும் செல்பி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மாணவியர் விடுதியில் முதல்வர் ஆய்வு
---------------காரைக்குடியில் நடந்த ரோடு ஷோவில் முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்தவாறு சென்றார். புது பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஆதி திராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக்கு சென்று மாணவிகளிடமும், பணியாளரிடம் குறைகளை கேட்டார். தினமும் இட்லி தானா இல்லை வேறு உணவு வழங்குகிறீர்களா என இரவு உணவுக்காக இருந்த இட்லியை விசாரித்து ருசி பார்த்தார். வேறு உணவு சுழற்சி முறையில் வழங்குவதாக பணியாளர் தெரிவித்தார்.