பள்ளி வேன் டிரைவர் கொலை குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
பள்ளி வேன் டிரைவர் கொலை குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
UPDATED : அக் 11, 2026 01:33 AM
ADDED : அக் 11, 2026 01:29 AM
ராணிப்பேட்டை: பள்ளி வேன் டிரைவர் கொலை வழக்கில், தொடர்புடைய, நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலுார் மாவட்டம், கம்மவான்பேட்டையைச் சேர்ந்தவர் ரமீஷ்கான், 34. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், அம்மணபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜ.கிஷோர், 21, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அமிர்தி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 19, ஆரணி, கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ர.கிஷோர், 21. இவர்கள், பள்ளி வேன் டிரைவர் இம்ரான், 47, கொலை வழக்கில், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., சிபின் பரிந்துரை செய்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியா, ரமீஷ் கான், ஜ.கிஷோர், ஹரிகிருஷ்ணன், ர.கிஷோர் ஆகியோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
பின்னர், போலீசார் வேலுார் மத்திய சிறையில் உள்ள, நான்கு பேரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்வதற்கான ஆணையை வழங்கினர்.
