பட்டாசு கடையில் தீ விபத்து: 4 நேபாள தொழிலாளர்கள் காயம்
பட்டாசு கடையில் தீ விபத்து: 4 நேபாள தொழிலாளர்கள் காயம்
ADDED : நவ 07, 2026 07:00 PM

சின்னமனுார்: தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே காமாட்சிபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
காமாட்சிபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் அழகுமுத்து, பூமலைக்குண்டு ரோட்டில் பட்டாசு கடை நடத்துகிறார். கடைக்கு பின்புறம் கோடவுன் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை, கோடவுனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு எரிந்து சாம்பலானது.
இதில் கோடவுனில் தங்கியிருந்த நேபாள தொழிலாளர்கள் புஷ்ஹெர் மந்தாரி 43, தீபா மந்தாரி 40, சிவசங்கர் புஷாரா 35, ஆனந்த புஷாரா 33, ஆகியோர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரு சரக்கு வாகனங்கள் முழுமையாக எரிந்தன. ஒரு டூவீலர், டிராக்டர் சேதமடைந்தது. ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
