வெளிநாட்டு சுற்றுப்பயணம்; வெள்ளை அறிக்கை தந்தே ஆகணும்; கேட்கிறார் இ.பி.எஸ்.,
வெளிநாட்டு சுற்றுப்பயணம்; வெள்ளை அறிக்கை தந்தே ஆகணும்; கேட்கிறார் இ.பி.எஸ்.,
UPDATED : செப் 23, 2024 03:25 PM
ADDED : செப் 23, 2024 11:05 AM

சென்னை: 'நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த தி.மு.க., முதல்வர் ஸ்டாலின் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து குறைவான முதலீட்டை முதல்வர் ஸ்டாலின் ஈர்த்துள்ளார். மற்ற மாநில முதல்வர்கள் ஈர்த்ததை விட மிக மிக குறைவான முதலீட்டை கொண்டு வந்துள்ளார். நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ரூ.18,000 கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. 40 மாத தி.மு.க., ஆட்சியில் ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக கேலி பேசினார். ஆட்சியாளர்கள் மாறினாலும் அதிகார வர்க்கம் அப்படியேதான் இருக்கும். ஆட்சி அமைப்பு நிரந்தரமானது ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறக்கூடியவர்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.