ADDED : ஜூலை 15, 2025 06:33 AM

சென்னை; போலீஸ் விசாரணையில், கோவில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவத்தால், 'சஸ்பெண்ட்' ஆன மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரத்திற்கு பதிலாக, பார்த்திபன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், சிவங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், 27, தனிப்படை போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார். இதன் காரணமாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ஆஷிஷ் ராவத், கட்டாய கத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை டி.எஸ்.பி.,யாக இருந்த சண்முகசுந்தரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவர் வகித்து வந்த பணிஇடத்திற்கு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல, சென்னை எம்.கே.பி., நகர் உதவி கமிஷனர் மணிவண்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காவ்யா உட்பட, மாநிலம் முழுதும், டி.எஸ்.பி.,க்கள், 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.