சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 40 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 40 ஆண்டு சிறை
ADDED : மார் 29, 2025 04:18 AM

ஊட்டி,: ஊட்டியில், எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் எட்டு வயது மகள் அதே பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வந்தார்.
அப்பகுதியிலுள்ள கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சிறுமியை அவரது தாத்தா அழைப்பதாக காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித், 24 கூறி, அருகேயுள்ள சோலைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தப்பியோடிய அஜித்தை ஊர்மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து, போக்சோ உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஜன., 18ல் கைது செய்தனர்.
இவ்வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அஜித்திற்கு, 40 ஆண்டுகள் நான்கு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரத்து, 400 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அஜித் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்றவாளி
கடந்த, 2022ல் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இவருக்கு 32 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.