2 நாட்களில் 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்; பஸ் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
2 நாட்களில் 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்; பஸ் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
ADDED : ஜன 12, 2025 06:51 AM

சென்னை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் கடந்த 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நேற்று முதல் துவங்கியது. பொங்கலுக்காக வரும் (ஜன)14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. நேற்று (ஜன.11) மட்டும் தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 4,107 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. சிறப்பு பஸ்களில் 2.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மொத்தம் 7,513 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.