48 மணி நேர உண்ணாவிரதம்: ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்
48 மணி நேர உண்ணாவிரதம்: ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்
ADDED : டிச 03, 2025 07:18 AM

சென்னை: 'தொடர் இரவு பணி கூடாது; பயணப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் ஓட்டுநர்கள், 48 மணி நேர உண்ணாவிரதப் போராட் டத்தை, நேற்று துவக்கினர் .
ரயில் ஓட்டுநர்களுக்கு, எட்டு மணி நேரம் பணி என்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் இரவு பணியை தவிர்க்க வேண்டும்.
பயணப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, ஆறு அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நாடு முழுதும் ரயில்வே மண்டல அலுவலகங்களில், நேற்று 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.
சென்னை, சென்ட்ரல் அருகில் நடந்த போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல், திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதுகுறித்து, சங்கத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலச்சந்திரன், தென்மண்டல இணை செயலர் பார்த்தசாரதி ஆகியோர் கூறியதாவது:
ரயில் ஓட்டுநர்கள், தற்போது 12 மணி நேரத்துக்கு மேலாக பணியாற்றுகின்றனர். நான்கு தொடர் இரவு பணி வழங்கப்படுகிறது. இதனால், ஓட்டுநர்கள் சோர்ந்து போகின்றனர். போதிய ஓய்வு இல்லாததால், மன நலம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
எனவே, பணி நேரம் குறைப்பு, பயணப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளோம். பயணியர் பாதுகாப்பு மற்றும் ரயில் ஓட்டுநர்களின் நலனை கருத்தில் வைத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

