UPDATED : ஜன 08, 2024 01:05 AM
ADDED : ஜன 07, 2024 11:15 PM

சென்னை: ஏழு மாவட்டங்களின் எஸ்.பி.,க்கள் உட்பட, போலீஸ் உயர் அதிகாரிகள் 48 பேர், நேற்று(ஜன.,08) இடமாற்றம் செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் எஸ்.பி.,யான டாக்டர் சுதாகர், சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர், பதவி உயர்வுடன் வேலுார் டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டு உள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி., சசாங் சாய், 'க்யூ' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அரியலுார் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, விருதுநகருக்கும்; ராமநாதபுரம் எஸ்.பி., தங்கதுரை, கிருஷ்ணகிரிக்கும் மாற்றப்பட்ட உள்ளனர். இவர்கள் உட்பட, போலீஸ் உயர் அதிகாரிகள், 48 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான லஞ்ச ஒழிப்பு துறை டி.ஐ.ஜி., லட்சுமி, சேலம் டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி, வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, சென்னை தெற்கு போக்குவரத்து இணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோருக்கு ஜ.ஜி.,க்களாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., திருநாவுக்கரசு, உளவுத் துறை பாதுகாப்பு பிரிவின் டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்கள் உட்பட, 16 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.