ADDED : செப் 09, 2011 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு, விதிமுறை மீறல்கள், ஊராட்சி நிதிக்கு இழப்பு ஏற்படுத்திய ஐந்து ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் ஜி.வசந்தா, பெரியகோட்டை ஊராட்சி தலைவர் கே.குருசாமி, நிலக்கோட்டை ஒன்றியம் பச்சைமலையான்கோட்டை ஊராட்சி தலைவர் மு.மஞ்சுளா, சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சி தலைவர் எஸ்.
ஜான் பீட்டர், கொடைக்கானல் ஒன்றியம் வில்பட்டி ஊராட்சி தலைவர் எஸ். செல்வராஜ் ஆகியோர் மீது புகார் வந்தது. கலெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் செய்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.