காரில் சென்ற வி.ஏ.ஓ.,வை வழி மடக்கி தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
காரில் சென்ற வி.ஏ.ஓ.,வை வழி மடக்கி தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
UPDATED : நவ 28, 2026 12:14 AM
ADDED : நவ 28, 2026 12:12 AM
நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே காரில் சென்ற வி.ஏ.ஓ., வை வழி மடக்கி தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வி.ஏ.ஓ., சசிகுமார், 45. இவர் தனது நண்பரான ஜங்கலாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணு வீரரான சிங்காரவேலு, 45. என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, நாட்றம்பள்ளியிலிருந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
நாட்றம்பள்ளி ஏரிக்கோடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த, 5 வாலிபர்கள், அவர்கள் சென்ற காரை வழிமறித்து, அதன் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த, இருவரையும் சரமாரி தாக்கி, அவர்களிடமிருந்த பணத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி, ஆதி பெரமனுாரை சேர்ந்த ஆகாஷ், 27, அபிேஷக், 22, நாட்றம்பள்ளி கவியரசன், 22. சமையகாரனுாரை சேர்ந்த மேகநாதன், 21, மற்றும் வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த, 18 வயது வாலிபர் ஆகிய, 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
