தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சைபர் அடிமைகளாக்க ஆட்களை கடத்திய 5 பேர் கைது

சைபர் அடிமைகளாக்க ஆட்களை கடத்திய 5 பேர் கைது

சைபர் அடிமைகளாக்க ஆட்களை கடத்திய 5 பேர் கைது


ADDED : ஜன 31, 2025 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமைகளாக மாற்ற, கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்களை கடத்திய, ஐந்து பேர் ம் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளில் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி தருவதாகக்கூறி, சட்டவிரோத கும்பல், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து, கம்போடியா, லாவோஸ், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்களை கடத்துகிறது.

மன ரீதியாக சித்ரவதை


அங்கு சென்ற பின், அவர்களை, 'ஆன்லைன்' வாயிலாக, பண மோசடி செய்யும் சைபர் அடிமைகளாக மாற்றுகின்றனர். குற்றம் செய்ய மறுத்தால், அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, பட்டினி போடுவது என, உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதை செய்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு, ஆட்கள் கடத்தப்படுவது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 24 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.

கோவை சரகத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளில், முகவர்களாக செயல்பட்டு வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திய, சென்னையை சேர்ந்த பியோலியோராஜ், முகமது ேஷக் மீரான், சிவகங்கையை சேர்ந்த கவுதம், திருப்பூரைச் சேர்ந்த தாமோதரன், விருதுநகரைச் சேர்ந்த ராஜேஸ் என்ற ராஜதுரை ஆகிய ஐந்து கைது செய்துள்ளனர்.

சிறை


விசாரணையில், ஐந்து பேரும் தமிழகத்தை சேர்ந்த, 18 பேரை, சைபர் அடிமைகளாக மாற்ற, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி இருப்பது தெரியவந்துஉள்ளது.

இதுவரை மாநிலம் முழுதும், வெளிநாடுகளுக்கு ஆட்கள் கடத்தப்படுவது தொடர்பாக, மலேஷியாவை சேர்ந்த ஆறு பேர் உட்பட, 54 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில், சைபர் அடிமைகளாக இருந்த, 16 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us