தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/5 வீடுகள் கொண்ட குடியிருப்பு திடீரென இடிந்ததால் பரபரப்பு

5 வீடுகள் கொண்ட குடியிருப்பு திடீரென இடிந்ததால் பரபரப்பு

5 வீடுகள் கொண்ட குடியிருப்பு திடீரென இடிந்ததால் பரபரப்பு


UPDATED : அக் 17, 2026 09:54 PM

ADDED : அக் 17, 2026 09:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 09:54 PM ADDED : அக் 17, 2026 09:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில், கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியில் ஆறுமுகம், சுகுணா ஆகியோருக்கு சொந்தமான, தரைத்தளத்துடன் சேர்த்து இரண்டு மாடிகள் கொண்ட ஐந்து வீடுகள் இருந்தன. பழமையான இந்த வீடுகள் வசிப்பதற்கு லாயக்கற்ற நிலையை அடைந்தது.

இதனால் இரண்டாண்டாக வீடுகளில் எவரும் வசிக்கவில்லை. வரும் வாரத்தில் இடித்து அகற்ற திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், ஈரோட்டில் தொடர் மழை பெய்து வருவதால், வீடுகள் வலுவிழுந்த நிலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு திடீரென இடிந்து சாலையை ஒட்டிய பகுதியில் விழுந்தது.

வீடுகளில் யாரும் இல்லாததுடன், வீடுகள் இடிந்து விழுந்த பகுதியிலும் எவரும் இல்லாததால் உயிரிழப்பு இல்லை. தீயணைப்பு வீரர்கள், வருவாய் துறையினர், போக்குவரத்து போலீசார் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us