உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 04, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
அரூர்: செகந்திராபாத் –- திருவனந்தபுரம் ‘சபரி எக்ஸ்பிரஸ்’ ரயில், நேற்று (நவ.,3) காலை, 5:30 மணிக்கு, ஜோலார்பேட்டை – சேலம் ரயில் வழித்தடத்தில், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது, அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சரவணக்குமார், ஏட்டுக்கள் அருண், சந்திரன் ஆகியோர், அந்த ரயிலில் சோதனை நடத்தினர். அதில், பொதுப்பெட்டி கழிப்பறை அருகே கிடந்த ஒரு பையில், 5 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
