sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

/

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

49


UPDATED : மார் 18, 2026 04:25 PM

ADDED : மார் 18, 2026 10:12 AM

Google News

49

UPDATED : மார் 18, 2026 04:25 PM ADDED : மார் 18, 2026 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. கடும் இழுபறிக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்களுக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அடம் பிடித்து வந்தன. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு தொகுதி குறைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 4 தொகுதிகளில் அதிமுக கூட்டணியிடம் தோல்வி அடைந்தது. இப்போது தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே திமுகவிடம் ஒரு தொகுதியை பறிகொடுத்துள்ளது.

கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;

* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)

* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)

* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)

* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)

* கொமதேக - 2 தொகுதி (1 குறைப்பு)

* இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)

முதன்மை நோக்கம்

நிருபர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது: திமுக ஒருபோதும் ஒரு நடிகரையோ, அல்லது கூட்டணி கட்சிகளையே மிரட்டியதில்லை. பாஜ.,வை வீழ்த்துவதே இலக்கு, முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கொள்ள முதல்வர் கேட்டார். இதனால் தான் 5 தொகுதிகளாக குறைத்து கொண்டோம். நாங்களும் இடங்களை குறைத்து தான் போட்டியிடப்போகிறோம் என முதல்வர் ஸ்டாலினும் கூறினார்.
5 இடம் தான் என்பது கட்சி நிர்வாகிகளை சோர்வடையச் செய்யும். ஆனாலும் அரசியல் நிலையில் இருந்து விலகமாட்டோம். சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படவில்லை; திமுக அதுபோன்று கட்டளை இடவில்லை. 4 கட்ட பேச்சுவார்த்தையிலும் திமுக எங்களுக்கு அழுத்தம் தரவில்லை.
பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கூறினார்கள். நடிகை குறித்து சி.வி.சண்முகம் பேசியது கண்ணியமல்ல; அதனை கண்டிக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் குறித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கருத்தை கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.








      Dinamalar
      Follow us