ADDED : அக் 25, 2024 09:33 PM
சென்னை:'அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும், கையில் பணம் இல்லாமல் தடுமாறுவது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவது சாத்தியமற்றது. எந்த ஆதரவும் இல்லாத, அந்த தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.
தீபாவளியை ஒட்டி புதுச்சேரியில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 5,000; அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்திலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வழியாக, 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.