தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தீபாவளிக்கு 5000 சிறப்பு பஸ்கள்

தீபாவளிக்கு 5000 சிறப்பு பஸ்கள்

தீபாவளிக்கு 5000 சிறப்பு பஸ்கள்


ADDED : அக் 18, 2024 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவு பஸ்களில், 74,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வசதிக்காக, 5000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அக்., 31ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

அரசு விரைவு பஸ்களில் செல்ல, www.tnstc.in மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்களில், பொது மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அக்., 29, 30ம் தேதிகளில் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய, 74,882 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் வசதிக்காக, 5000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us