sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்வாரிய செயலி 50,000 பேர் பதிவிறக்கம்

/

மின்வாரிய செயலி 50,000 பேர் பதிவிறக்கம்

மின்வாரிய செயலி 50,000 பேர் பதிவிறக்கம்

மின்வாரிய செயலி 50,000 பேர் பதிவிறக்கம்


ADDED : மார் 08, 2024 01:54 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக மின் வாரியம், மின் கட்டணத்தை எங்கிருந்தபடியும், எப்போது வேண்டுமானாலும் செலுத்த, 'TANGEDCO' மொபைல் செயலியை, 2018ல் அறிமுகம் செய்தது. அந்த செயலியை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' 15,500 பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த மொபைல் செயலியில், 'கம்ப்ளயின்ட்' எனப்படும், மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதி, கடந்த மாதம், 12ம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

அதில், மின்தடை, மீட்டர் பழுது, மின்கட்டணம், மின்னழுத்த பிரச்னை, சேதமடைந்த மின்கம்பம், மின் திருட்டு, தீ விபத்து, மின் கம்பி அறுந்தது தொடர்பான புகார்களை அளிக்கலாம்.

மொபைல் செயலியில் அளிக்கப்படும் புகார் மீது, விரைந்து தீர்வு காணப்படுகிறது. அதனால், தற்போது, செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

செயலியை அறிமுகம் செய்ததில் இருந்து, இம்மாதம் 2ம் தேதி வரை, அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 51,629 ஆக அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us