sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!

/

ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!

ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!

ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!

14


ADDED : ஜூலை 08, 2025 08:26 PM

Google News

14

ADDED : ஜூலை 08, 2025 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ம் தேதி நடந்தது. எதிர்பார்த்தபடியே லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடினர்.

சிறிய நகரமான திருச்செந்தூர் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்று சுவாமி தரிசனத்திற்கு பிறகு பத்திரமாக மீண்டும் வழியனுப்பி உள்ளது. இதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே போலீசாரால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் தான்.

கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடியாக களம் இறங்கினார். தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை டிஐஜி அபிநவ் குமார், திருநெல்வேலி டிஐஜி சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஒன்பது எஸ்.பிகள், 32 கூடுதல் எஸ்.பி.க்கள், 73 டிஎஸ்பிகள் 87 இன்ஸ்பெக்டர்கள் என 5500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

திருச்செந்தூருக்கு உள்வரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்துவதற்கு மைதானங்கள் தயார் செய்யப்பட்டதால் ஊருக்குள் வாகனங்கள் வரும் நெருக்கடி இல்லாமல் போனது. பெரும்பான்மையான பக்தர்கள் கூட்டம் கடற்கரைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். கூட்டம் ஆங்காங்கே நேரலையை பார்ப்பதற்காக எல் இ டி டிவிகள் அமைக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்தின் போது புனித நீர், ட்ரோன்கள் மூலமாக பக்தர்கள் முழுமைக்கும் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகம் முடிந்ததும் கூட்டம் அலைமோதிக்கொண்டு வெளியேற எத்தனிக்கும் நேரத்திலும் பெரிய தள்ளுமுள்ளு இல்லாமல் கூட்டம் கலைய துவங்கியது. பிக்பாக்கட்ள், திருடர்களை கண்காணிக்க வழக்கம் போல வெளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிய இடத்திலும் பெரிய அளவில் நகை பறிப்பு சம்பவங்கள் இல்லை. மொபைல், பர்ஸ், நகை காணாமல் போனதாக மொத்தமே நான்கு புகார்கள் மட்டுமே கோவில் போலீசுக்கு வந்துள்ளன.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் முடிந்த மறு தினம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திலும் இதே போல வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அங்கும் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளும் பகுதிகளில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் போலீசாரின் திட்டமிட்ட முன்னேற்பாடு காரணமாக சம்பவம் எதுவும் இன்றி சிறப்பாக நடந்தது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.






      Dinamalar
      Follow us