560 கவுரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லுாரிகளில் நியமனம்
560 கவுரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லுாரிகளில் நியமனம்
ADDED : செப் 02, 2025 05:00 AM
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 560 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் அரசு கலை மற் றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், 15,000 இடங்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் கூடுதலாக ஏற்படு த்தப்பட்டு உள்ளன.
இதில், நிரந்தர உதவி பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணவ - மாணவியரின் கல்வி கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க, கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன்படி, கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த மாதம் 18 முதல் 28 வரை, மண்டல வாரியாக நேர்காணல் நடந்தது.
நேர்காணல் வழியே தேர்வு செய்யப்பட்ட, 560 கவுரவ விரிவுரையாளர்களின் விபரங்கள், www.tngasa.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
தேர்வு செய்யப்பட்டவர்கள், வரும் 8ம் தேதிக்குள், கல்லுாரிகளில் பணியில் சேர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.