5.68 ஏக்கரில் புதிய மனைப்பிரிவு ஆவடியில் வி.ஜி.என்., அறிமுகம்
5.68 ஏக்கரில் புதிய மனைப்பிரிவு ஆவடியில் வி.ஜி.என்., அறிமுகம்
ADDED : பிப் 24, 2024 02:00 AM
சென்னையை அடுத்த ஆவடியில், அனைத்து வசதிகளுடன், புதிய மனைப்பிரிவு திட்டத்தை, வி.ஜி.என்., நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பல்வேறு இடங்களில் புதிய மனைப்பிரிவு மற்றும் குடியிருப்பு திட்டங்களை, வி.ஜி.என்., நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில், அனைத்து வசதிகளுடன் வீடுகள், மனைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், இப்பகுதியில் வளர்ச்சி வெகுவாக அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகர பஸ், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் என, போக்குவரத்து வசதிகளும் இங்கு அதிகரித்துள்ளன. மேலும், இங்கு, 78 அடி அகலத்துக்கு சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து, 2 நிமிட பயண தொலைவில், 5.68 ஏக்கரில், 'வி.ஜி.என்.ஹாரிசான்' என்ற புதிய மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகால், தரை வழி மின் இணைப்பு வசதி, தரமான தார் சாலை, எல்.இ.டி., தெருவிளக்கு என, அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சி.எம்.டி.ஏ., ஒப்புதல், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு, 646 முதல், 2,607 சதுர அடி வரை பல்வேறு அளவுகளில் வீட்டு மனைகள் உள்ளன. கேட்டட் கம்யூனிட்டி முறையில் இந்த மனைப்பிரிவு அமைந்துள்ளது.
இங்கு நிலம் வாங்குவோர், தங்கள் விருப்பப்படி வீடு கட்டி பாதுகாப்பான டவுன்ஷிப்பில் குடியேறும் அனுபவத்தை பெறலாம். அக்கம் பக்கத்தில் நகர்ப்புற வளர்ச்சியுடன், இப்பகுதி அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.