ADDED : ஜன 28, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தென் மாவட்டங்களில், கடந்த ஆண்டு, 598 ரவுடிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ரவுடிகளின் பகைமை குழுக்கள் கண்காணிக்கப்பட்டு, ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது. அந்த வகையில், ஓராண்டில், தென் மாவட்ட ரவுடிகள், 598 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாலியல் தொடர்பான வழக்கில், 70 பேர், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில், 152 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.