நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம், :   பெஞ்சல் புயல், மழை காரணமாக நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு வர வேண்டிய ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று காலை 8:10 மணிக்கு மதுரையிலிருந்து 66 பயணிகளுடன் சென்னை சென்ற இண்டிகா விமானம், மோசமான வானிலை காரணமாக மீண்டும் மதுரைக்கு திரும்பி வந்தது.
சென்னையிலிருந்து மதுரைக்கு வர வேண்டிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.

