ADDED : ஜூலை 11, 2026 01:55 AM

திருப்பூர்: உறவினரின், 30வது நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சேலம் திரும்பிய பேராசிரியர் குடும்பத்தினர் ஆறு பேர், விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஹேமா, 31. இவரது கணவர் முகிலன், 35. தனியார் கல்லுாரி பேராசிரியர்.
இவர்களின் குழந்தைகள், ஸ்ரீநித், 3, ஒன்பது மாத குழந்தை கனிஷ், ஹேமாவின் பெற்றோர் ஈஸ்வரன், 55, திருமகள், 50, பாட்டி சிவகாமி, 65 ஆகிய ஏழு பேரும், பல்லடத்துக்கு தங்களின், 'டாடா இன்டிகா' காரில் நேற்று வந்தனர்.
பல்லடம் அருகே, அறிவொளி நக ரில், ஹேமாவின் சித்தப்பா சக்திவேல் கடந்த மாதம் இறந்தார்.
அவரது, 30வது நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், நேற்று மாலை, திருப்பூ ர் வழியாக சேலம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மாலை, 5:4 0 மணிக்கு, ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில், காக்கா பள்ளம் ஸ்டாப் அருகே, முன்னால் செ ன்ற வாகனத்தை ஈஸ்வரன் முந்த முயன்றார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த டீசல் லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இதில், கார் அப்பளமாக நொறுங்க, காரில் இருந்த இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த ஹேமா, ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். ஊத்துக்குளி போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
