ADDED : ஜூலை 09, 2026 12:40 AM

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை, விரைவாக விசாரிக்க உத்தரவிடக் கோரி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்: நடப்பாண்டு ஜூன் 25ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில், 18,675 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
'போக்சோ' சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைவாக விசாரிக்க, தென்காசி, ஈரோடு, திருப்பூர், திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா ஒரு நீதிமன்றம், சென்னையில் கூடுதலாக ஒரு நீதிமன்றம் என, மொத்தம் ஆறு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
