6 சார் - பதிவாளர்கள் மாற்றம்: பதிவு இல்லாத பணி ஒதுக்கீடு
6 சார் - பதிவாளர்கள் மாற்றம்: பதிவு இல்லாத பணி ஒதுக்கீடு
ADDED : ஜன 15, 2026 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பதிவுத்துறையில், பல்வேறு சார் - பதிவாளர்கள் மீது, தொடர்ந்து லஞ்சப் புகார்கள் வந்துள்ளன. லஞ்ச ஒழிப்பு துறை, திடீர் சோதனைகளை நடத்தி உள்ளது. இதில் சிக்கியவர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், பதிவுத் துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், மயிலாடுதுறை பதிவு மாவட்டம், செம்பனார் கோவில், திருவண்ணாமலை பதிவு மாவட்டம் சேத்பட்; கரூர் பதிவு மாவட்டம் குளித்தலை; கோவை தெற்கு பதிவு மாவட்டம் சிங்காநல்லுார்; ராணிப்பேட்டை பதிவு மாவட்டம் ஆற்காடு ஆகிய அலுவலகங்களின், சார் - பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆறு பேருக்கும், பதிவு அல்லாத மற்ற பணிகளை ஒதுக்கி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

