sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு குளறுபடியால் பாய்ந்தது நடவடிக்கை; 6 பேர் சஸ்பெண்ட்

/

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு குளறுபடியால் பாய்ந்தது நடவடிக்கை; 6 பேர் சஸ்பெண்ட்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு குளறுபடியால் பாய்ந்தது நடவடிக்கை; 6 பேர் சஸ்பெண்ட்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு குளறுபடியால் பாய்ந்தது நடவடிக்கை; 6 பேர் சஸ்பெண்ட்

3


ADDED : பிப் 13, 2026 09:18 PM

Google News

3

ADDED : பிப் 13, 2026 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு பிப்.8ம் தேதி நடைபெற்றது. ஆனால் தேர்வு மையம் ஒதுக்கீடு தொடர்பான குளறுபடிகளால் அந்த தேர்வை ஒத்தி வைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்த தேர்வு மார்ச் 15ம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

இந் நிலையில், குரூப் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் மீது டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது;

பிப்ரவரி 8ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் ப்ரோகிராமர்கள் 2 பேர், பிரிவு அலுவலர்கள் 2 பேர் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நடைபெறாத வகையில் கூடுதலான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us