6 சார் – பதிவாளர் அலுவலகங்கள் புதிதாக தொடங்க அனுமதி
6 சார் – பதிவாளர் அலுவலகங்கள் புதிதாக தொடங்க அனுமதி
UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 11:46 PM

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, கோவையில், புதிதாக ஆறு சார் – பதிவாளர் அலுவலகங்கள் தொடங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பதிவுத்துறை, நிர்வாக வசதிக்காக, 11 மண்டலங்கள், 56 பதிவு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 595 சார் – பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதிக பத்திரங்கள் பதிவாகும் சார் – பதிவாளர் அலுவலகங்களை பிரிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதிதாக, சென்னை வடக்கு, மத்திய சென்னை, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, தாம்பரம், கோவை வடக்கு ஆகிய பதிவு மாவட்டங்களில், தலா ஒரு இணை சார் – பதிவாளர் அலுவலகங்கள் தொடங்கப்பட உள்ளன.
இந்த மாவட்டங்களில், ஏற்கனவே செயல்படும், இணை சார் – பதிவாளர் அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு, புதிய அலுவலகங்கள் தொடங்கப் படும். இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை, பதிவுத்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.
