ADDED : பிப் 06, 2024 11:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கடந்த 22ம் தேதி நெடுத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களைக் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று(பிப்.,06) கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்களுடைய 2 விசைப்படகையும் அரசுடைமையாக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.