இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது
இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : அக் 13, 2025 12:17 AM

சென்னை: ''இரண்டு ஆண்டுகளில், இணைய வழி குற்றங்களில் ஈடுபட்ட, 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்,'' என, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, இரண்டு கட்டங்களாக, 'ஆப்பரேஷன் திரை நீக்கு' என்ற நடவடிக்கை வாயிலாக, 212 பேர் கைது செய்யப்ப ட்டனர்.
அதன்பின், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு, வெளி மாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேசிய அளவில், 'ஆப்பரேஷன் ஹைட்ரா' எனும் தேடுதல் நடத்தி, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில், தமிழகத்தில் பதுங்கி இருந்த சர்வதேச இணையவழி மோசடி கும் பலை சேர்ந்த, ஒன்பது பேர் கைதாகினர்.
மேலும், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் செயல்படும், இணைய கண்காணிப்பு குழுவினர், சைபர் ரோந்து நடத்தியதில், பணமோசடி கும்பலிடம் சிக்கி இருந்த, 336 பேர் மீட்கப்பட்டனர். இதன் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் வரை நடக்க இருந்த நிதி இழப்பு தவிர்க்கப்பட்டது.
இணையவழி குற்றங்களை தடுக்கவும், குறைக்க வும் முற்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் கைது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, 890 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு செப்டம்பர் வரை, 903 பேர் கைதாகி உள்ளனர். இன்னும் மூன்று மாதங்க ளி ல் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
மேலும், தொடர் குற்றங்களை தடுக்க, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 34 பேர், இந்த ஆண்டில் இதுவரை, 26 பேர் என, மொத்தம், 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.