UPDATED : ஜூலை 18, 2024 12:18 PM
ADDED : ஜூலை 18, 2024 11:35 AM

சென்னை: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணை பாதுகாப்பு கருதி காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 60 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் நேற்று 22 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 2வது நாளாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.