sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் 600 பேர் கைது

/

யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் 600 பேர் கைது

யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் 600 பேர் கைது

யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் 600 பேர் கைது

3


UPDATED : ஜன 21, 2026 11:58 AM

ADDED : ஜன 21, 2026 06:25 AM

Google News

UPDATED : ஜன 21, 2026 11:58 AM ADDED : ஜன 21, 2026 06:25 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், கோரிக்கைகளை வலியுறுத்தி யோகாசனங்கள் செய்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 13வது நாளாக, 600க்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியர்கள், அரசின் கவனத்தை ஈர்க்க, யோகாசனங்கள் செய்தபடி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் கைது செய்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிச் சென்று திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

Image 1524613

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணி நீட்டிப்புக்கான அரசாணை வெளியிடப்படாத நிலையில், மார்ச் வரை ஊதியம் வழங்கும்படி, கருவூல அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் கைது


தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த டிச., 26 முதல் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற 1,200 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்களில் ஒரு பிரிவினர் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். நேற்று தமிழகம் முழுதும் சாலை மறியலில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லதுரை தலைமையில், 80க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை எம்.ஜி.ஆர்., சிலை அருகே மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்து, அரசு பஸ்சில் அழைத்து சென்றனர். அப்போது, தனியார் பஸ்சில் சில சத்துணவு ஊழியர்களை எஸ்.ஐ., சிவக்குமார் வலுக்கட்டாயமாக ஏற வற்புறுத்தினார். இதனால், அவருடன் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்ட பின்னரே, சத்துணவு ஊழியர்கள் மறியலை கைவிட்டு கைதாகினர்.



கைது செய்யப்படுவோருக்கு வழங்க சாப்பாட்டுக்கு அலையும் போலீசார்

சென்னையில், கடந்த 26 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தினமும் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து, மாலை விடுவித்து வருகின்றனர். கைது செய்யப்படும் ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கும், மதிய உணவாக சாம்பார், தயிர், பிரிஞ்சி, உள்ளிட்ட சாதங்களும், மாலை நேரத்தில், டீ, காபி போன்றவையும் வழங்கப்படுகின்றன. இதற்காக, காவல் துறைக்கு தனி நிதி எதுவும் ஒதுக்கவில்லை. இதனால், போலீசார் உணவு வாங்க பெரிதும் சிரமப்படுகின்றனர். ஹோட்டல்களில் பேசி குறைந்த விலைக்கு உணவு வாங்குகின்றனர். அத்துடன் கோவில்களில் அன்னதானம் செய்வோரிடம், உணவு பெற்று பார்சல் கட்டி வழங்குகின்றனர். உணவு வழங்க முடியாத நாட்களில், கைது செய்யப்படுவோரை மதியத்திற்கு மேல் நகருக்கு வெளியில் கொண்டு சென்று விடுகின்றனர். இப்பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து அழைத்துச் செல்ல, அரசு பஸ்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன.
தினமும் பஸ்களை அனுப்ப, அரசு போக்குவரத்துக் கழகங்களும் தயங்குகின்றன. சில நாட்களில் அரசு பஸ்கள் குறைவாக கிடைப்பதால், தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் பேசி, அவர்களின் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் கைது செய்யப்படும் ஆசிரியர்களை தங்க வைக்க இடம் கிடைப்பதும் சிக்கலாகி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, போராட்டத்தில் ஈடுபடுவோரை அரசு அழைத்து பேசி, தீர்வு காண வேண்டும். இல்லையெனில் செலவுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us