உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 05, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் முழுதும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், கடந்த, ஆக., 28ல் இருந்து, செப்., 3ம் தேதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த, 238 புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது, குற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாக, 12,547 இடங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
பள்ளி செல்லாத, 61 குழந்தைகளை மீட்டுள்ளனர். நான்கு குழந்தை திருமணங்களை தடுத்துள்ளனர்; 3,448 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர்.
