தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தீப திருவிழாவில் 650 டன் குப்பைகள் அகற்றம்

தீப திருவிழாவில் 650 டன் குப்பைகள் அகற்றம்

தீப திருவிழாவில் 650 டன் குப்பைகள் அகற்றம்


UPDATED : நவ 26, 2026 09:30 PM

ADDED : நவ 26, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 09:30 PM ADDED : நவ 26, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த தீப திருவிழாவில், 650 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. துாய்மைப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாத பை வழங்கும்போது, நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டு, பெண்கள் மயக்கமடைந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த, 15ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, கடந்த, 24ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து, விழாவை பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பயன்படுத்திய பொருட்களால் உண்டான குப்பைகள் அகற்றும் பணி கடந்த, 3 நாட்களாக நடந்து வந்தது.

இதில், திருவண்ணாமலை மாநகரம், கிரிவலப்பாதை, தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் செய்யப்பட்ட இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துாய்மைப்பணி நடந்தது. இதில், திருவண்ணாமலை மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்தறை சேர்ந்த துாய்மைப்பணியாளர்கள், மற்றும் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த துாய்மைப்பணியாளர்கள் என, 2,400 பேர் ஈடுபட்டனர். இதில், கிரிவலப்பாதையில் ஆங்காங்க அன்னதானத்திற்கு வழங்கப்பட்ட இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், போன்ற குவியல் குவியலாக இருந்த, 650 டன் குப்பைகளை அகற்றப்பட்டன.

இந்நிலையில், துாய்மைப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், தேங்காய், 2 வாழைப்பழம், விபூதி, குங்குமம் பாக்கெட், அரை லிட்டர் வாட்டர் பாட்டில், ஒரு பிஸ்கட் பாக்கெட் என அடங்கிய பிரசாத பை, 1,000 பேருக்கு வழங்கப்பட்டன.

இதை கலெக்டர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார். அப்போது துாய்மை பணியாளர்கள் ஒருவரையொருவர் முந்திகொண்டு சென்றபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், பிரசாத பையை, கலெக்டர் முன்னிலையிலேயே, அவரவர் மொத்தமாக வாரி சென்றனர். மேலும், கூட்ட நெரிசலில் ஒரு பெண் மயக்கமடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us