அரசு அதிகாரிகள் 68 பேர்களுக்கு பதவி உயர்வு: 82 பேர்கள் இடமாற்றம்
அரசு அதிகாரிகள் 68 பேர்களுக்கு பதவி உயர்வு: 82 பேர்கள் இடமாற்றம்
ADDED : ஜன 31, 2024 07:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
68 பி.டி.ஓ.க்களுக்கு பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் 68 ஊராட்சி ஒன்றிய ஆணையர்களை( பி. டி. ஓ ., ) உதவி இயக்குனர்களாக( ஏ. டி) பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
82 அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குனர் நிலையில் பணியாற்றி வரும் 82 அதிகாரிகளை ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.