sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள்; குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்

/

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள்; குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள்; குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள்; குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்

16


UPDATED : அக் 18, 2025 08:43 AM

ADDED : அக் 18, 2025 05:14 AM

Google News

16

UPDATED : அக் 18, 2025 08:43 AM ADDED : அக் 18, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில், 6,862 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தகாத உறவு, காதல் விவகாரம், குடும்பத் தகராறு காரணமாகவே அதிக கொலைகள் நடந்துள்ளன.

தொழில் போட்டியில், ரவுடிகள் பழிக்கு பழியாக கொலை செய்யப்படுவர். கிராமங்களில் சொத்து தொடர்பான கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது சாதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய பிரச்னைகளுக்கு எல்லாம் கொலைகள் நடக்கின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த கொலைகள் குறித்து, காவல்துறை அதிகாரிகள் தகவல்களை திரட்டி உள்ளனர். அவற்றை, மதம் மற்றும் ஜாதி ரீதியாக முன்விரோதம் ஏற்பட்டு நடந்த கொலைகள், ரவுடிகள், நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் மற்றும் அரசியல் ரீதியாக நடந்த கொலைகளை வகைப்படுத்தி உள்ளனர் .

அதேபோல, மனநோயாளிகள் கொலை மற்றும் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட மன நோயாளிகள் எத்தனை பேர் என்ற விபரங்களையும் திரட்டி உள்ளனர். வரதட்சணை, காதல் விவகாரம், பாலியல் தொல்லை, தகாத உறவு, குடும்ப சண்டை, வாய்த் தகராறு, தொழில் போட்டி காரணமாக நடந்த கொலைகள் குறித்தும் காவல் துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கல், நில பிரச்னை, சொத்து அபகரிப்பு, முன்விரோதம், குடிபோதை மற்றும் காரணங்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் நடந்த கொலைகள் பற்றிய விபரங்களையும் சேகரித்து உள்ளனர். அந்த வகையில், ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில்,6,862 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Image 1483451

Image 1483452

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கொலைகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ததில், ஒவ்வொரு ஆண்டும் குடும்ப பிரச்னை காரணமாக, 400க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அதேபோல, தகாத உறவு காரணமாக, குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டிலும், 150 - 160 கொலைகள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

ஆபாசமாக திட்டி, வாய்த் தகராறில் ஈடுபட்டதால் குறைந்தபட்சம், 340 கொலைகள் நடந்துள்ளன. குடும்ப சண்டையால் நடந்த கொலைகள் தான் முன்னணியில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us