தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/7 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

7 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

7 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


UPDATED : அக் 19, 2026 07:13 PM

ADDED : அக் 19, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 07:13 PM ADDED : அக் 19, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பகுதிக்கு, காரில் கஞ்சாவை கடத்தி வந்த பழனி பகுதியை சேர்ந்த பிரபு, 24, புதுக்கோட்டையை சேர்ந்த கதிரவன், 28, ஆகிய, இருவரையும் போலீசார் கைது செய்து, ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மாருதி காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காருக்குள், ஏழு கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பிரபு மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த கதிரவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கதிரவன், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மூலமாக கஞ்சாவை வாங்கி பிரபு மூலமாக விற்பனை செய்தது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us