ADDED : மார் 05, 2026 06:19 AM
கரூர்:: கரூரைச் சேர்ந்தவர்: இவருக்கு: களில்: கூறப்படுகிறது.: இதுகுறித்து மகள்களின் தாய், 41, பலமுறை எச்சரித்தும், அவர் திருந்தவில்லை. இதனால், மூத்த மகள், 2025 ஜூன், 11ல், கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, கூலித்தொழிலாளியை, 'போக்சோ' சட்டத்தின் கீழ், கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
இதுதொடர்பான வழக்கு, கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தந்தைக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, தமிழக அரசுக்கு, நீதிபதி பரிந்துரைத்தார்.

