தலைமை நீதிபதிக்கு எதிராக 700 வக்கீல்கள் பிரதமருக்கு கடிதம்?
தலைமை நீதிபதிக்கு எதிராக 700 வக்கீல்கள் பிரதமருக்கு கடிதம்?
ADDED : பிப் 26, 2025 06:48 AM

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 700 பேர் கடிதம் எழுதியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளார். இவர், கடந்த செப்டம்பர் முதல், தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இவர் மீது, பல்வேறு புகார்களைக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 700 பேர் கையெழுத்துடன், புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த கடிதத்தில், நீதி, நியாயத்தை நிலைநிறுத்தும் வகையிலும், மக்கள் நலன், சென்னை உயர் நீதிமன்றத்தின் நற்பெயர் காக்கும் வகையிலும், இதில் கூறப்பட்டுள்ள விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.