ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீதம் ஓட்டுப்பதிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீதம் ஓட்டுப்பதிவு
UPDATED : பிப் 06, 2025 06:43 AM
ADDED : பிப் 06, 2025 01:50 AM

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 68 சதவீதம் ஓட்டு பதிவானது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் இறந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது.
நா.த.க., சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் என, 46 பேர் போட்டியிட்டனர். 2023 இடைத்தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இளங்கோவன் - 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது.
தற்போதைய இடைத்தேர்தலில், காங்.,குக்கு பதில் தி.மு.க.,வே நின்றதாலும், சீமான் கட்சி தவிர மற்ற அனைத்தும், தேர்தலை புறக்கணித்ததாலும், தி.மு.க., பெரிதாக பிரசாரம் செய்யவில்லை.
இதன் பலனாக காலை 9:00 மணி நிலவரப்படி, 10.95 சதவீதம், 11:00 மணிக்கு, 26.03 சதவீதம், மதியம் 1:00 மணிக்கு, 42.41 சதவீதம், மதியம் 3:00 மணிக்கு, 53.63 சதவீதம், மாலை 5:00 மணிக்கு, 64.02 சதவீதம், மாலை 6:00 மணிக்கு 68 சதவீதம் என ஓட்டு பதிவானது. மொத்தம், 68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
வரும் 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.